தகவல் பலகை

தகவல் பலகை : 1119

Author

TNUEF

Date Published



8 ஆண்டு உழைப்பு
முக்கியமான நூல்

‘சாதிப்பெருமை’ என்ற நூல். மூத்த பத்திரிகையாளர் மனோஜ் மிட்டா அவர்கள் Caste Pride என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலை, மூத்த பத்திரிகையாளர் ஃப்ரன்ட்லைன் ஆர்.விஜயசங்கர் அவர்கள் தமிழில் அழகாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

கீழ்வெண்மணி உட்பட கடந்த பல பத்தாண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் பல சாதிய வன்கொடுமைகள் குறித்து இந்த நூலில் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார் மனோஜ் மிட்டா.

டைம்ஸ் ஆப் இந்தியா வேலையை விட்டுவிட்டு எட்டாண்டு காலம் இந்த நூலை உருவாக்குவதற்காக அவர் உழைத்திருக்கிறார். ஆணவக்கொலைகளும், தீண்டாமை வன்கொடுமைகளும் அதிகரித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் வந்திருக்கும் மிக முக்கியமான நூல் இது…

ஊடகவியலாளர்
ஏ.ஆர்.பழனியப்பன்