தகவல் பலகை : 1122
Author
TNUEF
Date Published
ஒதுக்கப்பட்ட இந்தியா
பீகார் மோதிஹாரி மாவட்டத்தின் ரூல்ஹி கிராமத்தில் உள்ள மகா தலித் சமூகங்களில் ஒன்றான முஷஹர் குடியிருப்பிற்குள் நுழைந்தவுடன், காலமே நின்று போனது போல் உணர்வு ஏற்படும்.
சேறு குடிசைகள், காலணியின்றி வெறுங் காலோடு அலைந்து திரியும் குழந்தைகள், வெளியூருக்கு புலம்பெயர்ந்த கணவர்களைக் காண காத்திருக்கும் பெண்கள், வயலில் உழைத்தும் பசிக்கு எதிராக போராடும் சோர்வான முகங்கள்—இவை அனைத்தும் தேர்தல் மேடைகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளிலிருந்து வெகுதூரம் ஒதுக்கப்பட்ட ஒரு "இந்தியாவின்" சித்திரத்தை வரைகின்றன.
இந்த குடியிருப்பில் சுமார் 50 முஷஹர் குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலான ஆண்கள் வேலை தேடி பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கே தங்கியுள்ளனர். பெண்கள் தினமும் 8–9 மணிநேரம் வயலில் உழைத்தும், அவர்களுக்கு கிடைப்பது வெறும் 50–60 ரூபாய்தான்.
கிராமவாசி சம்பதிதேவியின் வார்த்தைகள் இது: “பசியைவிட பெரியது எதுவுமில்லை. நாங்கள் நாள் முழுவதும் வயலில் முதுகு வளைத்து உழைக்கிறோம். இருந்தாலும், அது எங்கள் குழந்தைகளுக்குக் கூட உணவளிக்க அது போதவில்லை.”
இந்த வார்த்தைகள் பசியும், வறுமையும், புறக்கணிப்பும் நிறைந்த ஒரு முழு சமூகத்தின் அமைதியான வலியை பிரதிபலிக்கின்றன.
(நன்றி : "மூக்நாயக்" - 10.09.2025)
https://en.themooknayak.com/dalit-news/bihar-elections-musahar-community-in-rulhi-village-of-motihari-struggles-with-poverty-migration-and-caste-discrimination
