தகவல் பலகை : 1124
Author
TNUEF
Date Published
நல்ல தீர்ப்பு
கரூர் மாவட்டம் சின்னதராபுரம் மாரியம்மன் கோவிலில் தலித் பக்தர்கள் வழிபடுவதற்கான உரிமையை உறுதி செய்ய தவறிய மாவட்ட நிர்வாகத்தை மதுரை கிளை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
நீதிபதி புகழேந்தி வார்த்தைகளில்,
“2025 ஆம் ஆண்டில் பட்டியல் சாதியினருக்கு கோவிலில் நுழைய நீதிமன்ற உத்தரவால் அனுமதி கிடைப்பது பெருமை அல்ல, அது அவமானம்” எனக் குறிப்பிட்டார். 1939-ல் சமூக சீர்திருத்தவாதிகள் தைரியத்தால் சாதித்ததை இன்று நீதிமன்ற தலையீட்டால் மட்டுமே அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது என நீதிபதி கூறினார்.
நீதிமன்றம் 1924–25 ஆம் ஆண்டின் வைக்கம் சத்தியாக்ரகம், 1931–32 ஆம் ஆண்டின் குருவாயூர் சத்தியாக்ரகம், 1936ஆம் ஆண்டின் திருவிதாங்கூர் கோவில் நுழைவு பிரகடனம், மேலும் 1939ஆம் ஆண்டின் மதுரை கோவில் நுழைவு போராட்டம் போன்ற வரலாற்றுப் போராட்டங்களை நினைவு கூர்ந்தது.
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வெறும் அலங்காரப் பதவிகள் அல்ல; அரசியலமைப்புச் சட்டப்படி பொறுப்பு வாய்ந்த பதவிகள்.
அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததன் மூலம் உரிமைகளைப் பாதுகாக்காமல் பாகுபாட்டை பாதுகாத்துள்ளனர்.
என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் செயலற்ற நிலை “கோழைத்தனம்” ஆகும் என நீதிமன்றம் கண்டித்தது.
மேலும், கோவிலுக்குள் பட்டியல் சாதியினரின் நுழைவினை தடுக்க முயன்ற கோவில் நிர்வாகிகள் உள்பட 17 பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றவியல் வழக்கை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்குப் பின், சின்னத் தாராபுரம் மாரியம்மன் கோவில் மீண்டும் திறக்கப்பட்டு, பட்டியல் சாதியினர் காவல்துறை பாதுகாப்புடன் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(நன்றி: https://www.ndtv.com/india-news/madras-high-court-slams-officials-for-failing-to-stop-caste-discrimination-at-karur-temple-9296761
