தகவல் பலகை : 1126
Author
TNUEF
Date Published
கீழடி
வரலாறும் புனைவும்
'நாகரிகங்கள் என்பவை மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. கடவுள் எந்த நாகரிகத்தையும் படைக்கவில்லை. அப்படி மனிதர்கள் உருவாக்கிய நாகரிகத்தை, புனைவுகளால் கட்டமைத்து கதைகளை வரலாறாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதை மறுதலிக்க வேண்டிய கட்டாயத்தில் இன்று நாம் இருக்கிறோம். வரலாறு என்பது ஆதாரங்களின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட வேண்டும். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றெல்லாம் என்னிடம் விவாதத்திற்கு வந்தவர்கள் உண்டு.
மகாபாரதத்தில் பாண்டிய மன்னன் பற்றிய குறிப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்கள். கீழடி முதல் இரண்டுகட்ட அகழாய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பாக அண்மையில் அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறையைச் சார்ந்த சில ஆய்வு மாணவர்கள் 'மணலூர் கீழடி மகாபாரதம்' என கீழடியோடு, மகாபாரதத்தை தொடர்புப்படுத்தி ஒரு கட்டுரையை எழுதிவிட்டார்கள்.
கீழடி அகழாய்வு அறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. அப்படி இருக்கும் சூழலில், அதற்கு முன்னால் ஒரு புனைவு கட்டமைக்கப்படுகிறது என்பதைதான், நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இதைக் கண்டிப்பாக நாம் முறியடித்தாக வேண்டும்.'
- அமர்நாத் ராமகிருஷ்ணா
