தகவல் பலகை : 1127
Author
TNUEF
Date Published
மோதிலால் நேரு
தேசிய தொழில் நுட்ப நிறுவனம்
பழங்குடி பேராசிரியருக்கு பாரபட்சம்
இந்தியாவின் கல்வி வளாகங்களை அதிர்ச்சியிலும் சர்ச்சையிலும் ஆழ்த்திய நடவடிக்கையாக, அலகாபாத் மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (MNNIT), பழங்குடியினர் (ST) சமூகத்தைச் சேர்ந்த உதவி பேராசிரியர் டாக்டர் எம். வெங்கடேஷ் நாயக்கை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது.
சாதி அடிப்படையிலான பாகுபாட்டுக்கு எதிரான அவரது உயர் நீதிமன்றப் போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டிய சில வாரங்களுக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்கம், டாக்டர் நாயக்கின் வாழ்க்கையில் மிக நெருக்கடியான கட்டத்தில் வந்துள்ளது. பிஎச்.டி மாணவர் ஒதுக்கீடுகளை மறுத்தது, பதவி உயர்வுகளைத் தாமதப்படுத்தியது, கற்பித குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது போன்ற அவரது குறைகளை தேசிய பழங்குடியினர் ஆணையம் (NCST), உச்ச நீதிமன்றம், மேலும் பிரதமர் அலுவலகத்திற்கே சென்ற முறையீடுகள் வாயிலாக ஆராயப்பட்டு வரும் சூழலில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
(நன்றி: மூக்நாயக் - 21.09.2025)
