தகவல் பலகை

தகவல் பலகை : 1208

Author

TNUEF

Date Published

ஆத்திரமூட்டும் ஆய்வு

பொய்களின் தோரணம்


ஆத்திரமூட்டும் ஒரு ஆய்வை இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) உதய்பூர் ஆசிரியர்கள் நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

60,000-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களையும் 4.38 கோடி மாணவர்களையும் உள்ளடக்கிய உயர்கல்வி குறித்த அனைத்திந்திய கணக்கெடுப்பு (AISHE) தரவுகளை அவர்கள் பகுப்பாய்வு செய்துள்ளனர்.

அவர்களின் ஆய்வு முடிவு என்னவெனில், பட்டியலிடப்பட்ட சாதி (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடி (ST), மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு (OBC) மாணவர்கள் இன்று இந்திய உயர்கல்வியில் “ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்பதே. மொத்தஉயர்கல்வி மாணவர் சேர்க்கைகளில் இப்பிரிவுகளின் இணைந்த பிரதிநிதித்துவம் 2010–11 ஆம் ஆண்டில் 43% இருந்ததை விட உயர்ந்து, 2022–23 ஆம் ஆண்டில் 60.8% ஆக உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவு, ஏதோ ஒரு மாற்றத்துக்கான தருணத்தை முன்னிறுத்துவது போலத் தோற்றமளிக்கும். ஆனால் உண்மை அகோரமாக பல்லை இளிக்கிறது.

. ஒன்று ஸ்டார் ஹோட்டல்களையும், ரோட்டோர கடைகளையும் சேர்த்து கணக்கு போட்டு சாமானிய மக்களே அதிகமான உணவகங்களை அனுபவிக்கிறார்கள் என்றால் எப்படி இருக்கும்! உயர்கல்வி என ஐ.ஐ.டி களையும், சிற்றூர்களின் கலைக் கல்லூரிகளையும் ஒரே தட்டில் வைத்து கணக்கு காண்பித்துள்ளார்கள்

. நாடாளுமன்ற நிலைக்குழு ஒரு மாறுபட்ட தகவல்களை வெளியிட்டது என்பதை கூட இவர்களின் ஆய்வு கவனிக்கவில்லை. இந்தியாவின் டாப் 30 உயர் கல்வி தனியார் நிலையங்களில் - AISHE 2022–23 தரவுகளை அடிப்படையில் - எஸ்சி மாணவர்கள் வெறும் 5% மட்டுமே; எஸ்டி மாணவர்கள் 1% கூட இல்லை; ஓபிசி மாணவர்கள் 24% மட்டுமே. இந்த மூன்று இட ஒதுக்கீட்டு பிரிவினரின் மக்கள்தொகை விகிதமோ 76%.. இவர்கள் சொல்கிற 60.8 சதவீதம் கூட எப்படி ஆதிக்கம் ஆகும்?

. மூன்றாவது இவர்கள் பொதுப் பிரிவு எனும் போது இப்போது EWS ஐ அந்த கணக்கில் கொண்டு வருவதில்லை என்பது புள்ளி விவரத்தை தவறாக சித்தரிப்பது.


https://en.themooknayak.com/discussion-interview/the-statistical-smokescreen-why-iim-udaipurs-enrolment-study-misleads-on-caste-equity