தகவல் பலகை
தகவல் பலகை : 1209
Author
TNUEF
Date Published
நீதிபதிகள் நியமனத்தில் "உயர்" சாதியினர் 76 %
மக்களவையில் நீதிபதிகள் நியமனம் குறித்து திமுக எம்.பி திரு டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில், "நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை.
2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 841 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பட்டியலினத்தவர் 3.8% பேரும்
பழங்குடியினர் 2.0% பேரும்
ஓபிசி பிரிவில் 12.2% பேரும்
சிறுபான்மையினர்கள் 5.5% பேரும்
நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்."
(நன்றி: மாலை மலர், 11.12.2025)
