தகவல் பலகை

தகவல் பலகை : 1211

Author

TNUEF

Date Published

நிறுவன ஒடுக்குமுறை :

25 நாள் போராட்டம் வெற்றி


உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் (BBAU), வரலாறு துறையில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வரும், முதல் தலைமுறை ஆய்வாளரான மூத்த தலித் மாணவர் பசந்த் குமார் கன்னௌஜியாவை வெளியேற்றிய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.

செப்டம்பர் மாதம் அந்த வளாகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தை ஒட்டி அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

25 நாட்கள் அமைதியாக நடத்தப்பட்ட தர்ணா போராட்டம், நாடு முழுவதும் ஆதரவையும், சர்வதேச அளவில் ஒருமைப்பாட்டையும் பெற்றதன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட நன்றி பதிவில், கன்னௌஜியா இதை “போராட்டமும் நம்பிக்கையும் பெற்ற வெற்றி” என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்வு, நிறுவனமயமான சாதியத்துக்கு எதிரான தலித் செயற்பாட்டாளர்கள் எதிர்வினைக்கான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.


https://en.themooknayak.com/dalit-news/bbau-revokes-dalit-phd-scholar-basant-kannaujiyas-expulsion-with-3-month-thesis-deadline-after-25-day-protest-victory