தகவல் பலகை : 1210
Author
TNUEF
Date Published
உயர் சாதி எது?
பாஜக ஆளும் மாநிலத்தில் பள்ளித் தேர்வில் கேள்வி
மகாராஷ்டிராவில் 8-ம் வகுப்புக்கான பயிற்சி தேர்வில் உயர்சாதி எது என்ற கேள்வி இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யவத்மால் மாவட்ட நிர்வாகம் உதவித்தொகைக்காக ஒரு தேர்வு நடத்துகிறது. அந்த தேர்வுக்கான பயிற்சி தேர்வில்தான் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வித்தாளை உருவாக்கும் பணி ஒரு நிறுவனத்திடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த கேள்விக்கு ஆசிரியர்கள் மற்றும் பலரிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது.
https://www.bbc.com/tamil/articles/cj69n1z0y96o
கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிரா எஸ் எஸ் எல் சி, ஹையர் செகண்டரி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளில் சாதி விவரங்கள் இடம் பெற்று இருந்தது மிகுந்த சர்ச்சைக்கு ஆளானது.
பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இத்தகைய முயற்சிகள் அரங்கேறுகின்றன என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
