தகவல் பலகை (1091) :
கலையும் இலக்கியமும் பளிச் என்று ஒரு கண்ணாடி போல் சமூகத்திற்கு எதிரே அதன் முகத்தைக் காட்டும். தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவல் படித்துப் பல நாள் உறக்கமிழந்தவர்கள் உண்டு. இந்திய முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான முல்க் ராஜ் ஆனந்தின் ‘தீண்டத்தகாதவன்’ பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இமையத்தின் ‘பெத்தவன்’ கதை, திவ்யா இளவரசன் நிஜ வாழ்க்கையில் நேர்ந்த செய்தி களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். ‘இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டு இருக்குதோ’ என்று சாதியத்தை சவுக்கால் அடித்த சித்தர்...